July 27, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? நக்கீரனை ஆபிஸை நொறுக்கிய அதிமுக !

1 min read

ஜெயலலிதா பற்றிக் கட்டுரை வெளியிட்டதற்காக நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.கவினர் தாக்கிய தினம் இன்று!

2012 ஜனவரி 7-ம் தேதி வெளியான நக்கீரனில் ‘மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்’ என்ற தலைப்பில் ஜெயலலிதா பற்றிக் கவர் ஸ்டோரி வெளியானது.
ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெ., “அதைப்பற்றிப் பேசாதீங்க. நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பேரும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம். என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.
நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வரமுடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார். அப்ப எம்.ஜி.ஆர், ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா ? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க” என்றபடி சிரித்திருக்கிறார்.
இது கட்டுரையில் இடம்பெற்ற செய்தி. இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நக்கீரன் இதழைத் தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தினார்கள். ஜெயலலிதாவைக் கேவலமாக எழுதியுள்ளதாக சொல்லி ’’நக்கீரனை விற்கக் கூடாது’’ எனப் பல கடைகார்களை அதிமுகவினர் மிரட்டினார்கள். நக்கீரன் இதழை எரிக்கும் போராட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எம்.எல்.ஏ-கள் எம்.பி-கள் நேரடியாகப் பங்கேற்றனர்.

உச்ச கட்டமாக நக்கீரன் அலுவலகத்தை நாள் முழுக்க தாக்குதல் நடத்தினார்கள். சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது சோடா பாட்டில், கற்கள் வீசப்பட்டன. உருட்டுக்கட்டைகளால் நக்கீரன் அலுவலகத்தில் இருந்த கார்கள், டுவீலர்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. அன்றைக்கு ஆளும் கட்சியாக அதிமுக இருந்ததால் அதிமுகவினர் நடத்திய தாக்குதலை போலீஸ் தடுக்காமல் வேடிக்கை பார்த்த்து. தாக்குதல் நடத்தியவர்களுக்கே பாதுகாப்பு கொடுத்தனர். தொடர்ந்து அணி அணியாக வந்து தாக்குதல் நடத்தினர். இதனால், ஜானிஜான்கான் தெருவில் உள்ள கடைக்கள், வீடுகளின் கதவுள் முமூடப்பட்டன.


“ஜனநாயக நாட்டில் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. கண்டிக்கத்தக்கது. எதிர்ப்பை சட்டப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அரசு இதுபோன்ற செயல்களை வேடிக்கைப் பார்க்க கூடாது” என திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

கட்டுரையில் இடம்பெற்றிருந்த அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் ‘’உண்மைக்கு மாறாகச் செய்தி வெளியிட்ட நக்கீரன் மீதும் அதன் உரிமையாளர், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் குழு பொறுப்பாளர்கள் மீதும் உரியச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அறிக்கை விட்டார். ’’ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்கும் வகையில்,’அம்மா பீஃப் உண்பவர் என்று உண்மைக்கு மாறான, ஒருகாலும் நடைபெறாத செய்தியைத் திட்டமிட்டுக் கெட்ட நோக்குடன் வெளியிட்டு உள்ளார்கள். அப்படிப்பட்ட நிகழ்வு ஒரு போதும் நடந்ததே இல்லை. எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவும் ஒருபோதும் பீஃப் உண்ணமாட்டார்கள்’’ எனவும் விளக்கம் அளித்திருந்தார் பொன்னையன்.

 

நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளிலும் அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டன.

This logo made for a online magazine, it a voice for a Tamil Indian peoples.