July 27, 2024

The தமிழ் Indian

நிஜம் பேசுவோம்

201 இடங்களில் டெபாசிட் இழந்த ராமதாஸுக்கு பேச்ச பாரு!

‘’சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்றிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்’’ என்று சேலம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் ராமதாஸ். இது உண்மை? இல்லை என்பதை 2016 சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அலசி பார்த்தாலே உண்மை தெரியும்.

’மாற்றம்… முன்னேற்றம்… அன்புமணி’ என்ற கோஷத்துடன் 2016 சட்டசபைத் தேர்தலை தனித்து சந்தித்தது பாமக. 

பாட்டாளி மக்கள் கட்சி. கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான போது ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 212 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது.

66 இடங்களில் மூன்றாமிடம் பிடித்தது. பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி ஆகிய 3 தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வந்தது. 

பா.ம.க., கோட்டை எனக் கூறப்பட்ட பென்னாகரத்தில் அன்புமணி தோல்வி அடைந்தார். பா.ம.க., வளர்ச்சிக்கு வித்திட்ட, தர்மபுரி மாவட்டத்தை மையமாக வைத்து, அ.தி.மு.க., – தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று, பென்னாகரம் தொகுதியில் பா.ம.க.,வினர் வெற்றி பெற்று வந்தனர். கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வில் இருந்து பிரிந்து சென்ற பெரியண்ணன், தி.மு.க., சார்பாக அந்த தொகுதியில் வெற்றி பெற்று, பா.ம.க.,வின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெரியண்ணன் இறந்த பின், 2010ல் நடந்த இடைத்தேர்தலில், அவர் மகன் இன்பசேகரன் வெற்றி பெற்றார்.

This logo made for a online magazine, it a voice for a Tamil Indian peoples.